லூக்12:49
பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன் அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
One story :
ஒருமுறை ஒரு வெள்ளியை செய்பவர் அதை செய்து கொண்டு இருந்தார் அப்போது ஒரு வாலிப பையன் அங்கு வந்தான் அந்த வாலிபன் அந்த மனிதரிடம் நீங்கள் ஏன் அதை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டான் அப்பொழுது அந்த மனிதன் இந்த வெள்ளியில் எப்பொழுது என் முகம் தெரியுமோ அப்பொழுது தான் அது சுத்த வெள்ளியாக மாறும் என்று கூறினார் அது போல தான் நம் நாதர் இயேசு கிறிஸ்து நம்மை பார்த்துக் கொண்டே இருக்கிறார் நமக்குத் துன்பம் வரும் போது நம்மை பார்த்துக் கொண்டே இருப்பார் . என் பிள்ளைகள் எப்போது சுத்த வெள்ளியாக மாறுவார்கள் .எப்போது என் முகம் அவர்கள் மேல் தெரியும் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறார் ஆனால் நாமோ நமக்கு துன்பம் வரும்போது என்னை நேசிக்க யாரும் இல்லையே என்று கதறுகிறோம் இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம் தகப்பன் தான் நேசிக்கிற பிள்ளையை தான் சிட்சிக்கிறார் இயேசப்பாவுக்கு யாரை பிடிக்குமோ அவர்களை தான் தவறும்போதுகண்டித்து அவர்களை எழுப்புதலுக்கு என்று ஆயத்த படுத்துகிறார் . நம்மிடத்தில பாவம் இருந்தால் எழுப்புதலுக்கு என்று ஆயத்தபடமுடியாது .நம்மிடத்தில் காணப்படும் எல்லா பாவங்களையும் நாம் விட்டு விட்டால் தான் எழுப்பதலுக்காக ஆயத்தம் படமுடியும் மற்றவர்களையும் நாம் ஆயத்தப் படுத்த முடியும் .
1.10 கன்னிகைகளை பற்றி பார்ப்போம் :
மத்தேயு 25 13
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாளிகையாவது நீங்கள் அறியாது இருக்கிறபடியால் விழித்திருங்கள் .
இந்த 10 கன்னிகைகளும் தீவட்டிகள் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர் கொண்டு போறாங்க ஆனால் ஐந்து பேர் புத்தி உள்ளவங்க ஐந்து பேர் புத்தி இல்லாதவங்க புத்தி இல்லாதவர்கள் தீவட்டி களை கொண்டு போனாங்க ஆனால் எண்ணெயை கொண்டு போகவில்லை புத்தி உள்ளவங்க தீவட்டியையும் என்ணையும் கொண்டு போனாங்க இப்போது மணவாளன் வர லேட்டாகும் அதனால் எல்லாரும் தூங்கினாங்க .நடுராத்திரி இதோ மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர்கொண்டு போக புறப்படுங்கள் என்று சத்தம் கேட்டது உடனே புத்தி உள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளை ஆயத்தப் படுத்தினா்கள் .ஆனால் புத்தி இல்லாதவர்கள் உங்கள் எண்ணெயில் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்டார்கள் ஆனால் புத்தி உள்ளவர்களோ கடையில் போய் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்கள் இவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார் புத்தியுள்ளவர்கள் அவரோடு பிரவேசித்தார்கள் கதவு மூடப்பட்டது .அவர்களும் திரும்ப வந்து ஆண்டவரே எங்களுக்குத் திறக்க வேண்டும் என்று கேட்டார்கள் அவரோ நான் உங்களை அறியேன் என்று கூறினார்.அதுபோல தான் நாமும் இந்த நாட்களில் கண்ணீரோடு ஜெபிக்க வில்லை என்றால் எழுப்புதலை கண்டுவிட முடியாது இந்த நாட்களில் நாமும் விழித்திருந்து அயத்தம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும் இதற்காக ஆவியின் அபிஷேகத்தை பெற்று கொள்ள வேண்டும் ஆவியின் அபிஷேகத்தைத் தாகத்தோடு கேட்டுப் பெற்று நாம் எழுப்புதல் அடைந்து மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவாேம்
2.மோசேயின் மூலம் ஏற்பட்ட எழுப்புதல்:
யாத்திராகமம் 32 13
உமது தாசனாகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரேலையும் நினைத்தருளும் உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல பெருக பண்ணி நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் அடியார் என்றைக்கும் சுதந்தரித்துக் கொள்ளும்படி அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மை கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டு சானெ்னீரே என்று கெஞ்சி பிரார்த்தித்தான்.
மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து அழைத்து வருகிறாா். அவர்கள் மலை அடிவாரத்தில் கன்று குட்டியை செய்து அதற்கு முன் ஆடிப் பாடுகிறார்கள்.மோசே கற்பனைகளோடு சீனாய் மலையிலிருந்து இறங்கி வருகிறாா் இவர்கள் உருவத்திற்கு முன்பாக ஆடி பாடுவதை கண்டதும் கையிலிருந்து கற்பலகயைை கீழே போட்டு உடைத்து போடுகிறாா் .கா்த்தரும் நான் இந்த ஜனங்களை அழித்து போடுகிறேன் என்று கூறுகிறார். ஆனாலும் மோசேயோ இந்த ஜனங்களுக்காக திறப்பிலே நிற்கிறார் . இவர்களுக்காக கெஞ்சி மன்றாடுகிறோ். இவர்களுடைய எழுப்பதலுக்காக மோசே கதறி அழுதார் .இது போலதான் நாமும் அனைவருடைய வீடும் ஒரு ஜெப வீடாகமாற வேண்டும் .நாம் கண்ணீர் விட்டு அழுதால்தான் எழுப்புதலை பெற முடியும் .முதலில் நாம் எழுப்புதலுக்கு ஆயத்த பட வேண்டும் பின்பு மற்றவர்களை ஆயத்தப் படுத்த வேண்டும் இதற்கு முக்கிய காரணம் ஜெபம் . இந்த மோசேயை போல கெஞ்சி ஜெபித்து எழுப்புதலை பெறுவோம்.
3.சீடர்கள் வழியாக வந்த எழுப்புதல்:
அப்போஸ்தலர் 2 41
அவனுடைய வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்தானம் பெற்றார்கள் அன்றையத்தினம் ஏறக்குறைய 3000 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் .
அப்போஸ்தலர் 4:4
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள் .அவர்கள் தொகை ஏறக்குறைய 5000 ஆயிருந்தது .
எழுப்புதல் என்றாலே திரள் கூட்டம் போ் இரட்சிக்க படுதல் ஒருமுறை செய்தி சொல்லிக்கொண்டிருந்தார் ஒரே நாளில் 3000பேர் இரட்சிக்கப்பட்டர்கள் இன்னொரு நாளில் 5000 போ் இரட்சிக்கப்பட்டார்கள் இதுபோல பவுலின் மூலம் ஒரு பெரிய எழுப்புதல் ஏற்பட்டது நாமும் கண்ணீரோடு ஜெபித்து மற்றவர்களுக்கு நற்செய்தி சொல்லி எழுப்புதலுக்காக ஆயத்த படுத்துவோம்
ஏசாயா 65 25
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும். சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும் புழுதிசா்ப்பத்துக்கு இரையாகும் என் பரிசுத்த பர்வதம் என்றும் அவைகள் தீங்கு செய்வதும் இல்லை கேடு உண்டாக்குவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் .
எழுப்புதல் நாட்களில் இவை அனைத்தும் நிறைவேறும் இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு கதவைத் திறந்தால் அவனோடு போஜனம் பண்ணுவேன் . நாமும் நம் இதய கதவை திறந்து எழுப்புதலுக்கு ஆயத்தமாகி பிறரையும் ஆயத்தப்படுத்த கண்ணீரோடு ஜெபிப்போம் கர்த்தர் தாமே நம்மோடு இருந்து எழுப்புதலை காண செய்யட்டும், ஆமென்.
Thank you
Comments
Post a Comment